வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரையிலும் நிப்டி 23,350க்கும் குறைவாகவும் வர்த்தகமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச அளவில் நிலவும் பதற்றம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார காரணிகள், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது போன்றவை பங்குச் சந்தைகள் இன்று எதிரொலித்தன.
காலை 9.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,012.17 புள்ளிகள் வரை சரிவைக் கண்டு 74,225.82 ஆக இருந்தது.
நிப்ஃடியும் 309.35 புள்கள் சரிவடைந்து 23,334.15 வரை சரிந்தது. ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையிலும் இருந்த 2,686 பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், வெறம் 730 நிறுவனப் பங்குகள் மட்டுமே எழுச்சியடைந்தன.
மிகப்பெரிய நிறுவனப் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அதன் தாக்கத்தால் சிறு நிறுவனப் பங்குகளும் 2 சதவிகிதம் அளவுக்கு சரிவடைந்தன.
Summary
Stock markets shocked on the first day of the week!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










