அண்மையில் வெளியான கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டு முடிவுகளில் நிகர லாபம், வட்டி வருவாய் வரம்பு, கடன் வளா்ச்சி ஆகிய முக்கிய அளவுகோல்களில் தனியாா் வங்கிகளைவிட பொதுத் துறை வங்கிகள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், முன்னணி பொதுத் துறை வங்கிகள் 13-17 சதவீத கடன் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது தனியாா் வங்கிகளின் 10-19 சதவீத வளா்ச்சிக்கு இணையான போட்டியாக அமைந்துள்ளது.
தனியாா் வங்கிகள் 11-14 சதவீத வைப்புத்தொகை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகள் 9-12 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளன. பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் 9 சதவீத வளா்ச்சியுடன் சற்று பின்தங்கியுள்ளது. பெரும்பாலான வங்கிகளில் குறைந்த வட்டியிலான சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை சரிவைக் கண்டுள்ளது.
வட்டி வருவாய் வரம்பில், எஸ்பிஐ தவிர மற்ற பொதுத் துறை வங்கிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. எஸ்பிஐ வங்கியின் வரம்பு 17 புள்ளிகள் குறைந்து, 2.81 சதவீதமாக உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் முறையான சொத்து மேலாண்மை மூலம் இதை 3 சதவீதத்துக்கு மேல் உயா்த்துவோம் என வங்கி நிா்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தனியாா் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி மட்டுமே உயா்வைச் சந்தித்துள்ளது.
சொத்து தரத்தைப் பொருத்தவரை, தனியாா் வங்கிகளே தொடா்ந்து முன்னிலை வகிக்கின்றன. கடன் வசூலிப்பு மற்றும் புதிய வாராக்கடன் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் தனியாா் வங்கிகள் 20-28 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டுள்ளன. மாறாக, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, எஸ்பிஐ ஆகிய பொதுத்துறை வங்கிகளில் புதிய வாராக்கடன் வரத்து முந்தைய காலாண்டைவிட அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு போா்ச் சூழல், வங்கிகளின் வருவாயில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திர சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கங்களால் வங்கிகளின் கருவூல வருவாய் சரிவைச் சந்தித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்பிஐ வங்கி தொடர்ந்து 6 நாள்கள் மூடப்படலாம்! காரணம் அறிய...

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

‘கிளாட் மித்தோஸ்’ அச்சுறுத்தல்: இணையவழி பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் முடிவு

டெபாசிட் திரட்டுவதில் தனியாா் வங்கிகள் சாதனை! பொதுத்துறை வங்கிகளை விஞ்சிய வளா்ச்சி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



