ஸீலியோ என்ற மின்னணு இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 60 ஆயிரம் விலையில் 120 கி.மீ. தூரம் வரை மைலேஜ் தரக்கூடிய வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் நிலவும் சமநிலையற்ற பதற்றமான சூழலால் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல், டீசலுக்கு வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறைந்த விலையிலேயே அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டரை ஸீலியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கி.மீ. வரை பயணிக்கலாம்.
இருவரை பேட்டரிகள் உள்ளன. லித்தியம், லீட் பேட்டரி என இருவரை பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் லித்தியம் பேட்டரிக்கு 4 - 5 மணி நேரமும், லீட் பேட்டரிக்கு 8 - 10 மணி நேரமும் சார்ஜ் செய்ய வேண்டும். இதில் 1.5 அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
180 கிலோ வரை சுமை ஏற்றும் திறன் கொண்டது.
முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றும் பின் பக்கம் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், எடை அதிகமாக இருந்தாலும் பாதுகாப்பான நிறுத்தம் உறுதி செய்யப்படும்.
அதிகபட்சமாக 25 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது. இதனால், சீரான மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும்.
இந்த மாடலில் முன்பு 10 அங்குல டயர் இருந்த நிலையில், தற்போது 12 அங்குல டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மென்மையான பயணத்தை உறுதி செய்யும் வகையில் முன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் சஸ்பென்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் அம்சங்களுக்கும் குறைவில்லை. ரிவர்ஸ் கியர், டிஜிட்டல் டிஸ்ப்ளே, பார்க்கிங் சுவிட்ச், ஆன்டி-தெஃப்ட் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்ரல் லாக்கிங் போன்ற வசதிகள் உள்ளன.
கருப்பு, வெள்ளை, சாம்பல் நீலம், சாம்பல் ஆகிய 4 வண்ணங்களில் ஸீலியோ எக்ஸ் மென் பிளஸ் கிடைக்கின்றன.
அமேசான் இணைய விற்பனை தளத்தில் ரூ. 62,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
ZELIO X men + Electric Scooter with 120 Km Mileage
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. பயணம்! ரூ. 44,490க்கு மின்சார ஸ்கூட்டர்!

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. பயணம்! டெஸ்லா மாடல் ஒய் எல் 3 மின்சார கார் அறிமுகம்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் தாங்கும்! அறிமுகமானது போக்கோ சி85 எக்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



