மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒருமுறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. பயணம்! டெஸ்லா மாடல் ஒய் எல் 3 மின்சார கார் அறிமுகம்!

15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 288 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

News image

டெஸ்லா மாடல் ஒய் எல் 3 - படம் / நன்றி - டெஸ்லா

Updated On :1 ஏப்ரல் 2026, 12:17 pm

டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக மாடல் ஒய் எல் 3 என்ற மின்சார கார் மலேசியாவில் இன்று (ஏப். 1) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 681 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் என டெஸ்லா அறிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெஸ்லா நிறுவனம் சொகுசுக் கார்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் மாடல் ஒய் எல் 3 என்ற மின்சார காரை டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏழு பேர் அமரும் வகையில் இடவசதி நிறைந்ததாகவும் சொகுசுக்கு குறைவில்லாமலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாடல் ஒய் எல் காரின் விலையானது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமலேயே உள்ளது. எனினும் இதற்கு முந்தைய மாடல் ஒய் எல்.ஆர்.-ஐ விட விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் ஒய் எல் காரானது, 4,976 மி.மீ. நீளம், 2,129 மி.மீ. அகலம், 1,668 மி.மீ. உயரம் உடையது.

மின்னணு முறையில் இருக்கையில் அகலத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

காரினுள் 18 ஒலிப்பெருக்கிகள் உள்ளன.

வெப்பத்தை ஈர்க்காத வகையில் சில்வர் நிற கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் பவர் 340kW ஆக உள்ளது. வேகத்திறனுக்காக 567Nm டார்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 201 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம்.

0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 5 விநாடிகளில் எட்டலாம்.

இது மாடல் ஒய் ஆர்எல் காரை விட 0.2 விநாடிகள் குறைவு.

15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 288 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

வெள்ளை, வைரத்தின் கருப்பு, நீலம், சிவப்பு, சில்வர் ஆகிய வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.

Summary

Tesla Model Y L electric SUV launch in Malaysia on 1 April: 681km range, supports V2L

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.