போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஹீரோ, ஓலாவுக்குப் போட்டி... ரூ. 1 லட்சத்துக்கு புதிய மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கும் ஏத்தர்!

டிவிஎஸ், ஹீரோ, ஓலாவுக்குப் போட்டியாக ஏத்தர் தயாரிக்கும் புதிய மின்சார இருசக்கர வாகனம் குறித்து...

News image

ஏத்தர் மின்சார இருசக்கர வாகனம் - படம் / நன்றி - எத்தர்

Updated On :31 மார்ச் 2026, 4:46 pm IST

நிறைவான அம்சங்களுடன் ரூ. 1 லட்சத்திற்கு புதிய மின்சார இருசக்கர வாகனத்தை தயாரிக்கும் பணிகளில் ஏத்தர் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

டிவிஎஸ், ஹீரோ, ஓலா நிறுவனங்களில் அறிமுகமாகியுள்ள ரூ. 1 - 1.3 லட்சம் வரையிலான மின்சார இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களிடையே அதிகம் விற்பனையாகி வருகின்றன.

ஏத்தர் நிறுவனத்தின் தயாரிப்புகள் தரம் நிறைந்ததாக இருந்தாலும், விலையில் சமரசமற்ற தன்மை நிலவுவதால், குறைந்த பட்ஜெட்டில் மின்சார இருசக்கர வாகனத்தை வாங்க நினைப்பவர்களை ஹீரோ, ஓலா நிறுவனங்கள் கவர்ந்துவிடுகின்றன.

இந்நிலையில், நிறுவனத்தின் தரத்தில் சமரசமின்றி பட்ஜெட் விலையில் (ரூ. 1 லட்சத்திற்கு குறைவின்றி) புதிய மின்சார இருசக்கர வாகனத்தை தயாரிக்க தருண் மேத்தா தலைமையிலான ஏத்தர் குழு முடிவு செய்துள்ளது.

விலையைக் குறைப்பு என்பது தரத்தை குறைப்பதாக இருந்துவிடக் கூடாது என்பதால், தற்போது ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் 450எஸ் மாடலில் புதிய வேரியன்ட்டை தயாரிக்க ஏத்தர் திட்டமிட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐகியூப் (iQube) மற்றும் ஆர்பிட்டர் (Orbiter), ஓலாவின் எஸ்1, ஹீரோவின் விடா விஎக்ஸ்2 போன்ற மின்சார இருசக்கர வாகனங்கள் ரூ. 1 - 1.3 லட்சத்திற்குள் கிடைக்கின்றன. தற்போது ஏத்தர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மின்சார இருசக்கர வாகனமாக ரிஸ்டா உள்ளது.

மூன்று வகையிலான வடிவமைப்பில் இஎல் 01 (EL01) வேடியண்ட்டில் மின்சார இருசக்கர வாகனங்களை ஏத்தர் தயாரிக்கிறது. இதன் பேட்டரி திறன்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பிகள் வெளியாகவில்லை என்றாலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கி.மீ. வரை செல்லும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.