மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

261 கி.மீ. மைலேஜ்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 261 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

News image

டெஸ்ஸராக்ட் - படம் / நன்றி - அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ்

Updated On :30 மார்ச் 2026, 12:37 pm

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய மின்சார இரு சக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனம் டெஸ்ஸராக்ட் (Tesseract) என்ற மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

மற்ற மின்சார இரு சக்கர வாகனத்தில் இருந்து வேறுபடும் வகையில், நவீன வடிவமைப்புக் கொண்டுள்ளது.

20 hp மின்சார மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 2.9 விநாடிகளில் 0 முதல் 60 கி.மீ. வேகத்தை எட்ட முடியும். அதிகபட்சமாக 125 கி.மீ. வரை செல்லும் திறன் உடையது.

3.5 kWh, 5 kWh, 6 kWh என மூன்று வகையிலான பேட்டரி திறன்களுடன் அறிமுகமாகியுள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 261 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

30 நிமிடங்களில் 80% வரை வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்னிருக்கையில் 34 லிட்டர் நிறையுள்ள பொருள்களை வைக்கலாம். கூடுதல் சாவிகள் இல்லாமல் ஸ்மார்ட் இணைப்புகள் மூலம் பின்னிருக்கையை திறக்கலாம்.

இதுமட்டுமின்றி வையர்லெஸ் சார்ஜிங், ஏபிஎஸ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

பார்க்கிங் அசிஸ்டென்ட் உள்ளது. இதனால் வாகனத்தை எந்தவித சேதமுமின்றி பார்க்கிங்கில் நிறுத்தலாம்.

இதன் விலை ரூ. 1.2 - 1.45 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

Ultraviolette Automotive introduce new electric scooter Tesseract

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.