ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் என்ற மின்சார இருசக்கர வாகனத்தின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஓலா நிறுவனமே பேட்டரிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
இந்நிலையில், மின்சார இருசக்கர வாகனத்தின் விலையை ஓலா நிறுவனம் குறைத்துள்ளதால், ரோட்ஸ்டெர் மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா நிறுவனத்தின் 9.1 கிலோ வாட் பேட்டரி திறனுடைய ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் மின்சார இருசக்கர வாகனத்தின் அறிமுக விலை ரூ. 1,89,999 முதல் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
மின்சார வாகனங்களுக்கு அத்தியாவசியமான பேட்டரிகளை ஓலா நிறுவனமே தயாரிப்பதால், ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் மாடல் விலையை ரூ. 60,000 ஆக ஓலா நிறுவனம் குறைத்துள்ளது.
ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் வாகனம் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் திறன் உடையது. இதனால், அதிக தூரம் பயணிப்போருக்கும் ஏற்றதாக இந்த மின்சார வாகனம் உள்ளது.
எனினும் குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே இந்த சலுகை விலையில் விற்பனை நடைபெறும் எனவும் ஓலா சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மாலை 6 முதல் 9 மணி வரை விற்பனை நடைபெறும் என ஓலா தெரிவித்துள்ளது.
Summary
Ola Roadster X+ 9.1kWh electric nike Gets A Massive Price Cut
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



