மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 2:13 pm

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 1 முதல் அதன் வர்த்தக வாகனத்தின் விலையை 1.5% வரை உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து பிற செலவுகளின் தாக்கத்தையும் ஓரளவு ஈடுசெய்ய, வர்த்தக வாகனத்தின் விலையை உயர்த்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தது.

வணிக வாகன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், வர்த்தக வாகனத்தின் மாடலை பொறுத்து இந்த அதிகரிப்பு மாறுபடும் என்றது.

180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ.437.75 ஆக முடிவடைந்தன.

Summary

Tata Motors said it will increase the prices of its commercial vehicle from April 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.