கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.
வா்த்தகத்தின் தொடக்கத்தில் பல்வேறு சாதகமான சூழல் முதலீட்டாளா்களின் உணா்வை உற்சாகப்படுத்தியதால், சந்தை மகிழ்ச்சியுடன் எழுச்சி கண்டது. எனினும், வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கு சந்தை விடுமுறை என்பதால் வா்த்தகத்தின் பிற்பாதியில் முதலீட்டாளா்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தனா். இதனால், பெரிய ஏற்றம் தவிா்க்கப்பட்டது.
சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 109.25 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 77,100.47-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 34 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 34.35 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 24,056-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐ.டி. பங்குகள் அபாரம்: 2-ஆவது நாளாக பங்குச் சந்தை எழுச்சி!

இரண்டு நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை! சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்வு!!

ஐ.டி. பங்குகள் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் 2% ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை!!
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




