மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்ததைத் தொடர்ந்தும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவையால், உலகளாவிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்திற்கு இணையாக, இன்றைய வர்த்தகத்தில், இந்தியப் பங்குச் சந்தை கணிசமான உயர்வுடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸ் 2.30 சதவீதம் உயர்ந்து 1,695.40 புள்ளிகள் உயர்ந்தது நிலையில், நிஃப்டி கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,775.47 புள்ளிகள் உயர்ந்து 75,608.02 புள்ளிகளை எட்டியது. அதே வேளையில், நிஃப்டி குறியீடு 483.75 புள்ளிகள் உயர்ந்து 23,645.35 புள்ளிகளைத் தொட்டது.
வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,695.40 புள்ளிகள் உயர்ந்து 75,527.95 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 461.30 புள்ளிகள் உயர்ந்து 23,622.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
ஈரானின் எண்ணெய் துறையைக் கைப்பற்றுவதாக மிரட்டிய சில மணிநேரங்களிலேயே, அந்த நாட்டின் மீதான ராணுவத் தாக்குதல்களை ரத்து செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும், இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாகலாம் என்றார்.
சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன், டைட்டன், எடர்னல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவை உயர்ந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 4.63 சதவீதமும், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 2.81 சதவீதமும் உயர்ந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் உள்ளிட்டவை உயர்வுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் (வியாழக்கிழமையன்று) கணிசமாக உயர்வுடன் நிறைவுபெற்றது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 1,987.09 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு இந்தியாவிற்கு சாதகமான நிலையில் உள்ள நிலையில், உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 3.98 சதவீதம் சரிந்து 86.78 டாலராக உள்ளது.
Summary
Benchmark indices ended sharply with the Sensex climbing 1,695.40 points and Nifty surging nearly 2 per cent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: இந்திய பங்குச் சந்தை 1%க்கும் மேல் உயர்வு!

சரிவிலிருந்து மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!!

4 நாள் வீழ்ச்சிக்கு பிறகு, மிதமான எழுச்சியுடன் நிறவடைந்த பங்குச் சந்தை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



