திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

4 நாள் வீழ்ச்சிக்கு பிறகு, மிதமான எழுச்சியுடன் நிறவடைந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 49.74 புள்ளிகள் உயர்ந்து 74,608.98 புள்ளிகளாகவும் நிஃப்டி 33.05 புள்ளிகள் உயர்ந்து 23,412.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

மும்பை பங்குச் சந்தை

Updated On :13 மே 2026, 5:34 pm IST

மும்பை: உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவையால், கடந்த 4 நாட்களாக சரிந்து இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள், தங்களின் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இன்றைய வர்த்தகத்தில் சற்று உயர்வுடன் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் குறியீடு அதிகபட்சமாக 75,191.57 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 74,134.48 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 49.74 புள்ளிகள் உயர்ந்து 74,608.98 புள்ளிகளாகவும் நிஃப்டி 33.05 புள்ளிகள் உயர்ந்து 23,412.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 1,959.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக இரண்டு நாள் விற்பனைக்கு பிறகு, இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஒப்பீட்டளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், அத்துடன் சில சமையலறைப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் ஏப்ரல் மாதம் 3.48 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஜப்பானின் முக்கியக் குறியீடான நிக்கெய் 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தன.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமானது. நேற்று அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.5 சதவீதம் சரிந்து 107.27 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark equity indices Sensex and Nifty ended marginally higher on Wednesday, snapping their four-day losing streak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.