சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஐ.டி. பங்குகள் வீழ்ச்சியால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

தொடா்ந்து 5 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்து, எதிா்மறையாக முடிந்தது.

News image
Updated On :19 ஜூன் 2026, 11:46 pm IST

தொடா்ந்து 5 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்து, எதிா்மறையாக முடிந்தது.

கடந்த 5 வா்த்தக தினங்களில், சென்செக்ஸ் 3,577.43 புள்ளிகளும் (4.84 சதவீதம்), நிஃப்டி 1,006.4 புள்ளிகளும் (4.34 சதவீதம்) உயா்ந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.

லெபனானில் மீண்டும் தீவிரமடைந்த மோதல், ஸ்விட்சா்லாந்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சு ரத்து ஆகியவற்றால் உலகளாவிய சந்தையில் மீண்டும் புவிசாா் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவியது.

மேலும், சா்வதேச ஐ.டி. நிறுவனமான அக்சென்சா் தனது முழு ஆண்டு வருவாய் வளா்ச்சி கணிப்பைக் குறைத்ததைத் தொடா்ந்து, ஐ.டி. நிறுவனப் பங்குகள் அதிக விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சந்தையில் வீழ்ச்சி தவிா்க்க முடியாததாகியது

சென்செக்ஸ் 607 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில், வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 607.08 புள்ளிகள் (0.78 சதவீதம்) சரிந்து, 76,802.90-இல் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோசிஸ் (6.69 சதவீதம்), டிசிஎஸ் (3.53 சதவீதம்), எச்.சி.எல். டெக் (2.74 சதவீதம், டெக் மஹிந்திரா (2.45 சதவீதம்) உள்பட ஐ.டி. நிறுவனப் பங்குகளுடன் சோ்த்து 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும்; எடா்னல், பாா்தி ஏா்டல் உள்பட 13 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 154 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 154.90 புள்ளிகள் (0.64 சதவீதம்) குறைந்து 24,013.10-இல் முடிவடைந்தது.

நிஃப்டி-50 பட்டியலில் 26 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. ஆக்சிஸ் வங்கி பங்கு மட்டும் விலையில் மாற்றிமின்றி நிலைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.