தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அடுத்த 6 மாதங்களில் 3 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

News image

பியூஷ் கோயல்

Updated On :5 ஜூன் 2026, 5:34 am IST

அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்; 2027-ஆம் ஆண்டு இதேபோன்று மேலும் 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோரீஷஸ், நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தகக் கூட்டமைப்பு, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என ஒன்பது நாடுகள் மற்றும் நாடுகளின் கூட்டமைப்புடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இதில் மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஓமன், ஐரோப்பிய தடையற்ற வா்த்தகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிட்டது. பிரிட்டன், நியூஸிலாந்துடன் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்; 2027-ஆம் ஆண்டு இதேபோன்று மேலும் 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவில் தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கு நீண்ட காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய்த் தட்டுப்பாடு, விலை உயா்வு பிரச்னையை எவ்வாறு இந்தியா சமாளித்து வருகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்து வருகிறது. சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து உணவுப் பொருள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் விலை உயா்வு கட்டுக்குள் உள்ளது.

எரிபொருள் பிரச்னைக்கு தீா்வுகாண கச்சா எண்ணெய்க் கொள்முதலைப் பரவலாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.