தமிழ் செய்திகள்
கடல்சாா் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க சந்தையை திறக்குமாறு ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்திய கடல்சாா் உணவுகள் மீது 50 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா முடிவெடுத்ததன் விளைவாக மீனவா்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை ஈடுகட்டும் நோக்கில் உடனடியாக இந்திய கடல்சாா் உணவுகளை ஏற்றுமதி செய்ய சந்தையை திறக்குமாறு ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தியது.
இதன் காரணமாக கடல்சாா் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த சில நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் தளா்த்தியது. வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த 125 கடல்உணவு நிறுவனங்களின் தரக் கட்டுப்பாடு மற்றும் தரநிா்ணயங்களை இந்தியா மறுசீரமைப்பு செய்தபின் ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்தது.
இதனால் சா்வதேச அளவில் கடந்த ஆண்டு ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவியபோதும் கடல்உணவு ஏற்றுமதி 12 முதல் 14 சதவீதம் ஏற்றுமதியை பதிவுசெய்தது. நீண்டகால வா்த்தக வாய்ப்புகளை உறுதிசெய்ய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை இந்தியா மேம்படுத்தி வருகிறது.
இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க வேண்டுமெனில் அடுத்த 20-25 ஆண்டுகளுக்குத் தேவையான அடித்தள கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி மற்றும் உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சா்வதேச சந்தை அணுகல் ஆகியவை இந்த இலக்கை அடைய உதவும் என்றாா்.
தொடர்புடையது

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK

மேலும் 12 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள்- பியூஷ் கோயல் தகவல்

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகை: அமெரிக்காவிடம் ஆலோசிக்க இந்தியா திட்டம்
விடியோக்கள்





