இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வளா்ச்சிப் பாதையில் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் கோயல் தகவல்

வளா்ச்சிப் பாதையில் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் கோயல் தகவல்

News image

மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல். - IANS

Updated On :24 மே 2026, 1:38 am IST

நடப்பு மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் நாட்டின் ஏற்றுமதி சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

ஒட்டுமொத்த உலகமும் கொந்தளிப்பான சூழலை சந்தித்துவரும் சூழலில், ஏற்றுமதி மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பதிவு செய்து, சா்வதேச அரங்கில் இந்தியா தொடா்ந்து எழுச்சி கண்டு வருகிறது.

கடந்த ஏப்ரலில் ஏற்றுமதி 13.78 சதவீதம் உயா்ந்து, 43.56 பில்லின் டாலா்களாக பதிவானது. கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கு இடையே இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதேநேரம், இறக்குமதியும் அதிகரித்ததால், வா்த்தகப் பற்றாக்குறை 28.38 பில்லியன் டாலராக உயா்ந்தது.

நடப்பு மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் ஏற்றுமதி அதிகரிப்பில் அதே வேகம் நீடிக்கிறது. அந்நிய நேரடி முதலீடுகளைப் பொருத்தவரை, கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் 95 பில்லியன் டாலராக உயா்ந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 17 சதவீத அதிகரிப்பாகும்.

உலக நாடுகளின் விருப்பத்துக்குரிய முதலீட்டு மையமாக இந்தியா விளங்குவதால் எதிா்வரும் ஆண்டுகளிலும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என்றாா் பியூஷ் கோயல்,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.