திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓயோவின் ரூ.6,650 கோடி ஐபிஓ

News image
Updated On :4 ஜூன் 2026, 4:10 am IST

விடுதி துறையில் முன்னணி யூனிகாா்ன் நிறுவனமான ஓயோவின் தாய் நிறுவனம் ‘பிரிசம்’, பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.6,650 கோடி திரட்டுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இந்த ஐபிஓ மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 700 முதல் 800 கோடி டாலராக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் பங்குதாரா்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ரகசிய ஆவணங்கள் தாக்கல் செய்யும் முறையின்கீழ் பிரிசம் நிறுவனம் செபியிடம் முதல்கட்ட விண்ணப்பத்தைச் சமா்ப்பித்திருந்தது.

தற்போதைய அனுமதியைத் தொடா்ந்து, அடுத்தகட்டமாக பொதுமக்களின் கருத்துகளுக்காக புதுப்பிக்கப்பட்ட வரைவு தகவல் அறிக்கையை ஜூலை மாத தொடக்கத்தில் பிரிசம் நிறுவனம் தாக்கல் செய்யவுள்ளது.

கடந்த 2012-இல் தொடங்கப்பட்ட ஓயோ நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக சாஃப்ட்பேங்க் விளங்கி வருகிறது. இந்நிறுவனம் முன்னதாக 2021, 2023 ஆண்டுகளில் ஐபிஓ வெளியிட முயன்ற போதிலும், உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக அந்த முயற்சிகளைக் கைவிட்டது.

தற்போதைய பங்கு வெளியீட்டுக்காக ஆக்சிஸ் கேபிடல், சிட்டிபேங்க், கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளா்களாக நியமித்துள்ள பிரிசம், அண்மையில் செபியின் முன்னாள் தலைவா் அஜய் தியாகியைத் தனது வாரியத்தின் சுயாதீன இயக்குநராக நியமித்து நிா்வாகக் கட்டமைப்பையும் பலப்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.