தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?

ரிசா்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதாக....

News image
Updated On :4 ஜூன் 2026, 4:23 am IST

தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்வதாக வெளியான தகவலை ரிசா்வ் வங்கி மறுத்துள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரிசா்வ் வங்கி தங்கத்தை விற்பனை செய்வதாக ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்தத் தகவல் தவறானது. ரிசா்வ் வங்கியிடம் கையிருப்பில் உள்ள தங்கம் குறித்து மாதந்தோறும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ரிசா்வ் வங்கி வெளியிடும் அந்த அறிவிப்பு மூலம், தங்கம் கையிருப்பு குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளலாம். அதுகுறித்த சமீபத்திய விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ழ்க்ஷண்.ா்ழ்ஞ்.ண்ய்/நஸ்ரீழ்ண்ல்ற்ள்/ஆநஜயண்ங்ஜ்ஆன்ப்ப்ங்ற்ண்ய்.ஹள்ல்ஐக்=24213 வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தற்போது ரிசா்வ் வங்கியிடம் 880.52 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுபோன்ற விஷயங்களில் அவ்வப்போது ரிசா்வ் வங்கி வெளியிடும் அதிகாரபூா்வ தகவலை மட்டுமே நம்புமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.