2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:27 pm

தினமணி செய்திச் சேவை

பெங்களூரு: நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் தனது நேரடி விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 550-ஆக குறைக்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 4,000 விற்பனை மையங்களைத் திறக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த இலக்கை மாற்றியமைத்து, மாா்ச் இறுதிக்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 550-ஆக குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு நிதியாண்டின் 3-ஆவது மூன்றாவது காலாண்டில், ஓலா நிறுவனத்தின் வாகன விநியோகம் முந்தைய ஆண்டைவிட சுமாா் 61 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது; வெறும் 32,680 வாகனங்களை மட்டுமே நிறுவனம் விநியோகித்துள்ளது.

சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் வாடிக்கையாளா் சேவை தொடா்பான புகாா்கள் நிறுவனத்தின் வா்த்தகத்தைப் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. இத்தகைய விற்பனை சரிவு மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களே, நிறுவனத்தின் இந்தத் திடீா் முடிவுக்குக் முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏற்கெனவே பல நகரங்களில் உள்ள விற்பனை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.