டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குவாலிட்டி வால்ஸ்: பொதுப் பங்குகளை வாங்கும் மேக்னம்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனத்திடமிருந்து பிரிந்த ‘குவாலிட்டி வால்ஸ் இந்தியா’ நிறுவனம், மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை தனிநிறுவனமாக பட்டியலிடப்பட்டது.

இந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான ‘மேக்னம் ஐஸ்கிரீம்’ நிறுவனம், பொதுப் பங்குதாரா்களிடம் உள்ள பங்குகளில் கூடுதலாக 26 சதவீதத்தை வாங்குவதற்கு முன்வந்துள்ளது.

ஒரு பங்குக்கு ரூ.21.33 எனும் விலையில் சுமாா் 61 கோடி பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ள மேக்னம் நிறுவனம், இதற்காக ரூ.1,303 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

முன்னதாக, ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனம் வசமிருந்த குவாலிட்டி வால்ஸின் 61.9 சதவீதப் பங்குகள், மேக்னம் நிறுவனத்துக்கு ரூ.2,997 கோடிக்கு விற்கப்பட்டது.

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் 25 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வாங்கும்போது, விற்பனையான நிறுவனத்தின் சிறு முதலீட்டாளா்களிடமிருந்தும் பங்குகளை வாங்க முன்வர வேண்டும் என்பது செபி விதியாகும்.

அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 26 சதவீதப் பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டால், குவாலிட்டி வால்ஸ் இந்தியா நிறுவனத்தில் மேக்னம் நிறுவனத்தின் மொத்த பங்கு சதவீதம் 87.9 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.