கூகுள் பிக்சல் 10எ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (பிப். 18) அறிமுகமாகியுள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று இரவு 9 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் கிளை விற்பனையகம் மற்றும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் கூகுள் பிக்சல் 10எ கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கூகுள் நிறுவனம் விலை குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் 8GB உள் நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 53,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 64,300 எனக் கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
6.3 அங்குல ஓஎல்இடி திரை கொண்டது.
திரை சுமுகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
திரையின் மேற்புறம் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமரா 48MP ஆகவும் இரண்டாவது கேமராவாக 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
5,100mAh பேட்டரி திறன். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் வழங்கப்பட்டுள்ளது.
summary
Google Pixel 10a launch todayexpected price, and full specs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நெல்லையில் நாளை பராஅத் புனித இரவு

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


