/

இந்தியாவில் வாரம் 10 கோடி பயனர்கள்! சாட்ஜிபிடி புதிய சாதனை!!

நாட்டில் பிப்ரவரி நிலவரப்படி வாரம் 10 கோடி பயனர்கள் சாட் ஜிபிடியை பயன்படுத்துவதாக சாம் ஆல்ட்மன் தகவல்.

News image
சாம் ஆல்ட்மன்- கோப்புப் படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 1:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

செய்யறிவு (ஏஐ) நிறுவனமான சாட்ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிப்ரவரி நிலவரப்படி வாராவாரம் 10 கோடி பயனர்கள் சாட் ஜிபிடியை பயன்படுத்துவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சாட்ஜிபிடி பயன்பாட்டுக்கான இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாடு இன்று (பிப். 16) முதல் பிப். 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி சாட்ஜிபிடி தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் நாட்டில் சாட்ஜிபிடி பயன்பாடு அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சாட்ஜிபிடி பயன்பாட்டிற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது.

இந்திய பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக சாட்ஜிபிடி மாறியுள்ளதையே இந்த எண்ணிக்கை காட்டுகிறது. தினசரி வேலைகளுக்கும் சாட்ஜிடிபியை இந்திய பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்துவது இந்தியாவில்தான். கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டிற்காக இந்திய இளம் தலைமுறையினர் சாட்ஜிடிபியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதை இது காட்டுகிறது.

கல்வி மற்றும் சுய மேம்பாட்டிற்கு சிறந்த தளமாக செய்யறிவு தளங்கள் மாறியுள்ளதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஆய்வுப் பணிகளுக்காக செய்யறிவு தளங்களைப் பயன்படுத்துவதில் இந்திய பயனர்கள் 4வது இடத்தில் உள்ளனர். 2025ஆம் ஆண்டில் வாரம் 80 கோடி பயனர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது, இந்த எண்ணிக்கை 90 கோடியை நெருங்கி வருகிறது. இந்த வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. பிப்ரவரி நிலவரப்படி வாராவாரம் இந்தியாவில் 10 கோடி பயனர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.