/

ஐஸ்வர்யா ராஜேஷ் - விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

ஐஸ்வர்யா ராஜேஷ் - விக்ராந்த் நடிக்கும் புதிய படம் குறித்து...

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “அண்டர் 18” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, கார்த்திக் பெருமாள்சாமி இயக்குகின்றார்.

அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் நடைபெறும் கதைகளத்துடன் உருவாகும் இப்படத்தின் தலைப்பை வியாழக்கிழமை (பிப். 19) அன்று மூத்த இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இப்படத்தை மெட்ராஸ்காரன் படத்தின் தயாரிப்பாளரான பி ஜகதீஷ் தயாரிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஒசூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

summary

The announcement of a new film “under 18” starring actors Aishwarya Rajesh and Vikranth has been made.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.