/

ஹாட்ஸ்பாட் - 2 இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்கள்!

ஹாட்ஸ்பாட் - 2 இயக்குநருக்கு கார் பரிசளிப்பு...

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்துள்ளனர்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக சில கவனங்களைப் பெற்றது.

சாதாரண கதையாக இல்லாமல், நவீன ஆண் - பெண் உறவுச்சிக்கல்கள், சமூக வலைதளங்களின் தாக்கம் என வித்தியாசமான கதைகளைக் கொண்டு அப்படத்தை உருவாக்கியிருந்தார்

கடந்த மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இதில், பிரியா பவானி சங்கர், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முதல் பாகம் போன்றே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. முக்கியமாக, ஆடை குறித்து தம்பி ராமய்யா பேசும் விஷயமும், சினிமா நடிகர்களைக் கொண்டாடுவது குறித்து எம்.எஸ். பாஸ்கர் பேசிய காட்சிகளும் கவனம் பெற்றன.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர்கள் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு புதிய காரை பரிசளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.