டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை வித் லவ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்தது குறித்து...

News image
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை “வித் லவ்” பட தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்துள்ளனர்...- Insta/ Magesh raj
Updated On :17 பிப்ரவரி 2026, 10:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை “வித் லவ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமான “வித் லவ்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவான இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்திருந்தார். பிரபல நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் “வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை”வித் லவ்” படத்தின் தயாரிப்பாளர்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, வித் லவ் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Tamil Nadu Chief Minister M.K. Stalin met the producers of the film “With Love” in person on Tuesday (Feb. 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.