டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

News image
ஓ.பன்னீர்செல்வம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், முதல்வர் ஸ்டாலினின் ஐந்தாண்டுகால ஆட்சி நிறைவு பெற்றதற்கு வாழ்த்தினேன். தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருப்பதையே ஐயப்பன் பேசியிருக்கிறார். மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கே வழி பிறந்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதனால் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலை சந்திப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலகிறது. ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் நேற்று இணைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ்ஸின் சந்திப்பானது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.