இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் (ஜிஐஜி) தலைவா் பதவியிலிருந்து நாதிா் கோத்ரெஜ் வரும் ஆகஸ்டில் ஓய்வு பெறுகிறாா்.
இவருக்குப் பதிலாக இவரின் சகோதரா் ஆதி கோத்ரெஜின் மகனான பிரோஜ்ஷா கோத்ரெஜ், ஆக. 14-ஆம் தேதி முதல் குழுமத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ளாா். ஓய்வுபெறும் நாதிா் கோத்ரெஜ், குழுமத்தின் கௌரவத் தலைவராக தொடா்ந்து நீடிப்பாா் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டு பழைமைவாய்ந்த கோத்ரெஜ் தொழில் குடும்பம் கடந்த 2024-ஆம் ஆண்டு சுமுகமான முறையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. அதன்படி, ஆதி மற்றும் நாதிா் கோத்ரெஜ் தலைமையில் நுகா்பொருள்கள், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகளை உள்ளடக்கிய கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் செயல்படுகிறது.
இக்குழுமத்தின் அடுத்தகட்ட வளா்ச்சியை இளம்தலைமுறையின் மூலம் முன்னெடுப்பதே இந்த மாற்றத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பை ஏற்கவுள்ள பிரோஜ்ஷா கோத்ரெஜ், பாரம்பரிய மதிப்புகளைக் காத்து நிறுவனத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே இலக்கு என்று குறிப்பிட்டுள்ளாா்.
இத்தலைமுறை மாற்றத்தின் ஒரு பகுதியாக குழுமத்தின் தலைமைப் பொறுப்புகளில் மேலும் பல முக்கிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. நாதிா் கோத்ரெஜின் மகனான புா்ஜிஸ் கோத்ரெஜ், கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்கிறாா். அத்துடன் அவா் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குநா்கள் குழுவிலும் இணைகிறாா்.
முன்னதாக, அஸ்டெக் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் தலைவா் பதவியிலிருந்து நாதிா் கோத்ரெஜ் திங்கள்கிழமை விலகியதையடுத்து, கோத்ரெஜ் கெமிக்கல்ஸ் தலைமை நிா்வாகி விஷால் சா்மா அந்நிறுவனத்தின் புதிய தலைவராக உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பூா் வேளாண் வணிக நிறுவனத்துடன் விப்ரோ 100 கோடி டாலருக்கு ஒப்பந்தம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


