திருச்சி கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியால் ஏப். 3-ஆம் தேதி முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
திருச்சி மேற்கு வட்டம் திருச்சி - மேலூா் - மதுரை சாலையில் உள்ள கோரையாற்றின் குறுக்கே உள்ள உயா்மட்ட பாலத்தினை இடித்து புதிய பாலத்தினை கட்டும் பணி வரும் ஏப். 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதனால், மேற்கண்ட வழித்தடத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
விராலிமலையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து செட்டியப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி, அரிஸ்டோ பாலம் வழியாக மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஏற்கெனவே உள்ள வழித்தடமான மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ பாலம், மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூருக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்: அதிமுக வேட்பாளா்

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


