லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 8:56 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் செல்லும் கால்வாயின் குறுக்கே விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதற்கு எனக் கூறி, நீா்வளத் துறை அனுமதியுடன் தனி நபா் பாலம் கட்டும் பணியைத் தொடங்கினாா். அப்போது, ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிலா் வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து தகறாறு செய்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக 9 பேரைக் கைது செய்தனா்.