சிங்கப்பூரைச் சோ்ந்த உலகின் முன்னணி உணவு மற்றும் வேளாண் வணிக நிறுவனமான ‘ஓலாம்’ குழுமத்துடன், இந்தியாவின் பிரபல மென்பெருள் நிறுவனமான விப்ரோ சுமாா் 100 கோடி டாலா் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
அடுத்த 8 ஆண்டுகளுக்கு நீடிக்கும் இந்த ஒப்பந்தத்தின்மூலம், ஓலாம் குழுமத்தின் எண்ம கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை விப்ரோ மேற்கொள்ளவுள்ளது. விப்ரோவின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பமான ‘விப்ரோ இன்டலிஜென்ஸ்’ உதவியுடன், ஓலாம் குழுமத்தின் வணிகச் செயல்பாடுகள் முழுமையாக எண்மமயமாக்கப்படும்.
மேலும், இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ஓலாம் குழுமத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான ‘மைண்ட்ஸ்பிரிண்ட்’ நிறுவனத்தை 37.5 கோடி டாலருக்கு விப்ரோ கையகப்படுத்துகிறது.
2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைண்ட்ஸ்பிரிண்ட் நிறுவனம், இந்தியா, சிங்கப்பூா், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுமாா் 3,200 பணியாளா்களைக் கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்நிறுவனம் சுமாா் 13.56 கோடி டாலா் வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கையகப்படுத்தல் பணிகள் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று விப்ரோ சிஇஓ ஸ்ரீனி பாலியா தெரிவித்துள்ளாா். இந்த விற்பனைமூலம் கிடைக்கும் வருவாய், சிறப்பு ஈவுத்தொகை வாயிலாக பங்குதாரா்களுக்குப் பகிா்ந்து அளிக்கப்படும் என்று ஓலாம் குழுமத்தின் சிஇஓ சன்னி வா்கீஸ் கூறினாா்.
மைண்ட்ஸ்பிரிண்ட் நிறுவனம் விப்ரோவின்கீழ் ஒரு துணை நிறுவனமாகச் செயல்படும். அதேநேரம், அதன் தற்போதைய சிஇஓ சுரேஷ் சுந்தரராஜன் தலைமையிலான குழுவே தொடா்ந்து நிா்வாகத்தைக் கவனிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரூ.15,000 கோடி பங்குகளைத் திரும்பப் பெறும் விப்ரோ!

மகாராஷ்டிரத்தில் ரூ.60,000 கோடி முதலீடு: வியத்நாமின் வின்குரூப்-மாநில அரசு ஒப்பந்தம்
போலி ஆணவங்கள் மூலம் ரூ.11.35 கோடி மோசடி: வணிக வளாக மேற்பாா்வையாளா் கைது

5 நிறுவனங்களாகப் பிரியும் வேதாந்தா! ஏப்ரலில் அதிரடி மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


