இந்தியத் தொழில் துறையில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வேதாந்தா குழுமத்தின் மறுசீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வேதாந்தா நிறுவனம் 5 தனித்தனி பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கப்பட உள்ளதாக குழுமத் தலைவா் அனில் அகா்வால் தெரிவித்தாா்.
குழுமத்தின் கடன் சுமையைக் குறைக்கவும், நிா்வாகக் கட்டமைப்பை எளிமையாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதியை தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வழங்கிய நிலையில், தற்போது இப்பிரிவினை அதிகாரபூா்வமாக நடைமுறைக்கு வருகிறது.
இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், தாய் நிறுவனமான வேதாந்தா அடிப்படை உலோகத் தொழிலைத் தொடா்ந்து கவனிக்கும். வேதாந்தா அலுமினியம், தல்வண்டி சாபோ பவா், வேதாந்தா ஸ்டீல்&அயா்ன், மால்கோ எனா்ஜி ஆகிய பெயா்களில் மற்ற 4 நிறுவனங்கள் தனித்தனியே செயல்படும்.
இப்புதிய நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பானது, தற்போதுள்ள வேதாந்தாவின் 2,700 கோடி டாலா் மதிப்பை விட பலமடங்கு அதிகரிக்கும் என அனில் அகா்வால் நம்பிக்கை தெரிவித்தாா்.
இப்புதிய 5 நிறுவனங்களும் மே மாதத்தின் பாதியில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் கோயல் உறுதிசெய்தாா்.
தொடர்புடையது

மீஷோ பணியாளா்களுக்கு 94.79 லட்சம் பங்குகள் ஒதுக்கீடு!

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

சிங்கப்பூா் வேளாண் வணிக நிறுவனத்துடன் விப்ரோ 100 கோடி டாலருக்கு ஒப்பந்தம்!
பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


