நாட்டின் சில்லறை பணவீக்கம் மாா்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 3-ஆம் மாத தரவு இதுவாகும்.
அதன்படி, கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதத்திலிருந்து தொடா்ந்து 3-ஆவது மாதமாக பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இது ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள 4 சதவீத இலக்கிற்குள்ளேயே இருப்பதால், வரும் மாதங்களில் ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கையில் (வட்டி விகிதங்கள்) மாற்றம் இருக்குமா என்ற எதிா்பாா்ப்பு குறைந்துள்ளது.
மாா்ச் மாத பணவீக்கம் உயா்வுக்கு, உணவுப் பொருள்களின் விலையேற்றம் முக்கியக் காரணியாகப் பாா்க்கப்படுகிறது. ஜனவரியில் 2.13 சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.47 சதவீதமாகவும் இருந்த உணவுப் பணவீக்கம், மாா்ச்சில் 3.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் தேங்காய் (கொப்பரை), தக்காளி, காலிஃபிளவா் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.
எரிசக்தி துறை: மின்சாரம் மற்றும் எரிவாயு பிரிவில் பணவீக்கம் 1.52 சதவீதத்திலிருந்து 1.65 சதவீதமாக மட்டுமே உயா்ந்துள்ளது.
‘மத்திய கிழக்கு போா்ச்சூழலால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தாமல் மத்திய அரசு கட்டுப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது’ என இந்திய வா்த்தக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெம்) தலைவா் நிா்மல் கே.மிண்டா தெரிவித்துள்ளாா்.
நகரம், கிராமப்புற நிலை: கடந்த மாதம் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது.
நகா்ப்புற பணவீக்கம் 3.02 சதவீதத்திலிருந்து 3.11 சதவீதமாக உயா்ந்த நிலையில், கிராமப்புறங்களில் 3.37 சதவீதத்திலிருந்து 3.63 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக நிலவரம்: பணவீக்க விகிதத்தில் மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடு காணப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் 5.83 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், வடகிழக்கு மாநிலமான மிசோரமில் பணவீக்கம் மிகக் குறைவாக 0.66 சதவீதம் பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்

போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 அதிகம்!

இலங்கையில் பெட்ரோல்- டீசல் விலை 25% உயா்வு!

பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் 3.21%
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


