மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக நிறைவு.

News image

இந்திய ரூபாய்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:41 pm

மும்பை: ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாலும், ரிசர்வ் வங்கி தனது முக்கியக் கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் நடுநிலை நிலைப்பாட்டைத் தொடர்ந்ததாலும், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக நிறைவடைந்தன.

அந்நியச் செலாவணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் அல்ல என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உறுதியளித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை வலுப்பெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.92 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு வலுப்பெற்று ரூ.92.56 என்ற நிலையை எட்டியது. முடிவில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 47 காசுகள் உயர்ந்து ரூ.92.59ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Summary

The rupee appreciated 47 paise to close at 92.59 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.