மும்பை: அரசியல் பதற்றங்கள் தணியக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், டாலரின் மதிப்பில் ஏற்பட்ட சரிவும், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையால் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 29 காசுகள் உயர்ந்து ரூ. 92.85 ஆக நிறைவுபெற்றது.
உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் மீண்டும் முதலீடுகள் குவியத் தொடங்கிய நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு உயர்வதற்கு இது காரணமாக அமைந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 92.93 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ. 92.65 தொட்ட நிலையில், பிறகு அதன் குறைந்தபட்ச அளவான ரூ. 92.98ஐ எட்டியது. இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இது முந்தைய நாள் நிறைவு விலையை விட 29 காசுகள் உயர்ந்து ரூ. 92.85 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ. 93.14 என்ற நிலையில் இருந்தது.
Summary
The rupee appreciated by 29 paise to settle at 92.85 against the US dollar on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



