மும்பை: ரூபாயின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளைத் தொடர்ந்து, இன்றயை வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.93.04 ஆக நிறைவுபெற்றது.
ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து, இந்திய ரூபாய்க்கு சாதகமாக இருந்தாலும், நிலையற்ற அரசியல் சூழலுக்கு மத்தியில், தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி, வலுப்பெறும் டாலர் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை ரூபாயின் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஊக வணிக நிலையை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி தனது விதிகளைக் கடுமையாக்கியதுடன், வங்கிகள் தினசரி வணிக முடிவில் 100 மில்லியன் டாலர் அளவை கடந்து, 'நெட் ஓபன் பொசிஷன்' வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தியது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.13 என்ற அளவில் வர்த்தகத்தை தொடங்கி, பிறகு வேகம் எடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.92.79 என்ற உச்சத்தைத் தொட்டு, நேற்றைய முடிவிலிருந்து 14 காசுகள் உயர்ந்து ரூ.93.04ஆக நிறைவுசெய்தது.
Summary
The rupee gained 14 paise to close at 93.04 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



