மும்பை: ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் கெடு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் இருந்த நிலையில், இன்றை அந்நியச் செலாவனி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.93.00ஆக நிறைவடைந்தன.
நிலையற்ற அரசியல் சூழலுக்கு மத்தியில், வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறி வருவதும், டாலரின் உறுதித்தன்மை மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மாறிவரும் அரசியல் சூழ்நிலை மற்றும் வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.05ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு மேலும் சரிந்து ரூ.93.07ஆக வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 17 காசுகள் ஆகும். வர்த்தக நேரத்தின் இடையே, இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.86 என்ற நாளின் அதிகபட்ச அளவை எட்டியது. முடிவில், ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 10 காசுகள் சரிந்து ரூ.93.00ஆக நிலைபெற்றது.
Summary
The rupee depreciated 10 paise to close at 93.00 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 82 காசுகள் சரிந்து ரூ. 93.71ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ. 92.58 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



