விவோ நிறுவனத்தின் எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன், ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தைவானில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 13எஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக விவோ எஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போனை விவோ தயாரித்துள்ளது.
ஃபிளாக்ஷிப் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தயாராகியுள்ள இதன் விலை இந்தியாவில் ரூ. 55,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முக்கிய அம்சமாக, சோனி நிறுவனத்தின் லென்ஸ்களை விட மேம்பட்ட திறன் உடைய ஸெய்ஸ் (Zeiss) லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை எடுப்பதில் தனித்துவமான இருக்கும்.
விவோ எக்ஸ் 200 எஃப்இ சிறப்பம்சங்கள்
6.31 அங்குலத்தில் அமோலிட் திரை வழங்கப்பட்டுள்ளது.
திரையின் பயன்பாடு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
தூசு மற்றும் நீர்புகாத்தன்மை உடைய IP69 திறனுடன் வருகிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ புராசஸர் கொண்டது.
நினைவகத்தை 512GB வரையிலும் உள்நினைவகத்தை 12GB வரையிலும் பெருக்கிக்கொள்ளலாம்.
6,500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
வையர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.
ஸெய்ஸ் லென்ஸுகளுடைய 3 கேமராக்கள் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளன. (50MP பிரைமரி சென்சார், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 8MP அல்ட்ரா வைட் சென்சார்) முன்பக்க செல்ஃபி கேமராவுக்கு 50MP லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

ஓப்போ முதல் ரியல்மீ வரை..! ஏப்ரலில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!

6500mAh பேட்டரியுடன் வெளியான விவோ ஒய் 11, விவோ ஒய் 21
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


