கோடைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த முன்னணி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
விவோ, ஓப்போ, ரியல்மீ, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட கேமிரா, பேட்டரி போன்ற சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra)
ஏப்ரல் மாதத்தில் ’ஃபைன்ட் எக்ஸ்9 அல்ட்ரா’ மாடல் ஸ்மார்ய்போனை ஓப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ரா மாடல்கள், தற்போது உலக சந்தைக்கு வரவுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6.82 அங்குல அளவுள்ள பெரிய AMOLED திரையைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மூலம் இயங்கக்கூடும்.
ரேம் - 16 ஜிபி, சேமிப்பு வசதி 512 ஜிபி, சென்சார் உள்ளடக்கிய கேமிரா மற்றும் 7,050mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன் பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6)
ஒன் பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் 6 மாடல் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.78 அங்குல அளவுள்ள பெரிய AMOLED திரையைக் கொண்டுள்ளது.
கேமிங் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. பிரதான கேமிரா 50 எம்பி, செல்ஃபி கேமிரா 16 ஜிபி ஆகும். 4 கே விடியோ பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
விவோ வி70 எஃப்இ (Vivo V70 FE)
விவோ நிறுவனத்தின் வி70 எஃப்இ மாடல் ஸ்மார்ட்போன் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் ஏஐ புகைப்படத் தொகுப்புடன் கூடிய 200எம்பி ஓஐஎஸ் அல்ட்ரா-கிளியர் (200MP OIS Ultra-Clear) பிரதான கேமிரா உள்ளது.
90W அதிவேக சார்ஜிங் வசதியுடன் கூடிய 7,000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. பர்பிள் மற்றும் மான்சூன் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றன. விலை - 8ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 37,999, 8ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 40,999, 12ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 44,999 ஆகும்.
ரியல்மீ 16 (Realme 16)
ரியல்மீ 16 மாடல் ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் 8.1 மி.மீ. என்ற மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், ஐபி66/ஐபி68/ஐபி69 தரமதிப்பீடுகளையும் பெற்றுள்ளது.
6.57 அங்குல 120Hz AMOLED திரை, 6400 டர்போ சிப்செட் ஆகியவை கொண்டுள்ளது. பிரதான கேமிராவும் செல்ஃபி கேமிராவும் 50 எம்பி வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி திறன் 7,000mAh.
இதன் விலை 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ. 31,999 ஆகும்.
விவோ டி5 ப்ரோ (Vivo T5 Pro)
விவோ நிறுவனத்தின் டி5 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மத்தியில் அறிமுகம் செய்யக்கூடும். 6.8-அங்குல பெரிய AMOLED திரை, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
9,020mAh பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியுடனும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர விலைப் பிரிவு சந்தையை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தப்படும் இந்த போன் ரூ. 30,000 முதல் ரூ. 35,000 இருக்கக்கூடும்.
Summary
Smartphones Releasing in April!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஏஐ+ நோவா 2 ஸ்மார்ட்போன்! அடுத்த விற்பனை எப்போது?
லாவாவின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்! ரூ. 7,999 மட்டுமே..!

6500mAh பேட்டரியுடன் வெளியான விவோ ஒய் 11, விவோ ஒய் 21

மார்ச் 9-ல் அறிமுகமாகிறது ஓப்போ கே 14 ஸ்மார்ட்போன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



