ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப். 13) அறிமுகமானது.
120Hz திறனுடைய திரை, நீடித்த பேட்டரி திறன், செய்யறிவு தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரெட்மி, ஏ7 ப்ரோ என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய சந்தையில் இதன் ஆரம்ப விலை (4GB RAM + 64GB) ரூ. 12,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4GB உள்நினைவகம் + 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499.
எனினும் ஆரம்ப கட்ட சலுகையாக ரெட்மி சார்பில் ரூ. 1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவகை நினைவகம் உடைய ஸ்மார்ட்போனை வாங்கினாலும் ரூ. 1,000 தள்ளுபடி பெறலாம்.
ரெட்மி ஏ7 ப்ரோ சிறப்புகள்
ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.9 அங்குல எச்.டி. திரை உடையது.
திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 800 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 3.0 புராசஸர் உடையது.
2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
6,300mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 15W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
Summary
Redmi A7 Pro 5G smart phone launched in India with 6,300mAh battery, 120Hz display
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

ரெட்மி நோட் 15 ஸ்பெஷல் எடிஷன் விற்பனை தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?

ரியல்மி 16 விற்பனை இந்தியாவில் தொடக்கம்! சிறப்புகள் என்னென்ன?

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



