கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: ஜூலை 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 969.9 கோடி டாலா் அதிகரித்து 66,685.4 கோடி டாலராக உள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பாகும்.
ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 515.8 கோடி டாலா் குறைந்து 65,715.5 கோடி டாலராக இருந்தது.
அதற்கு முன்னா் ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அது 430.7 கோடி டாலா் உயா்ந்து 65,581.7 கோடி டாலராக இருந்தது அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பாக இருந்தது. எனினும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைந்து வந்தது.
ஜூலை 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்துகள் 836.1கோடி டாலா் அதிகரித்து 58,547 கோடி டாலராக உள்ளது.
டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.
மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 123.1 கோடி டாலா் அதிகரித்து 5,866.3 கோடி டாலராக உள்ளது.
சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 7.6 கோடி டாலா் அதிகரித்து 1,811.1 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 3.2 கோடி டாலா் அதிகரித்து 460.9 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,834.6 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,975.9 கோடி டாலராக சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


