மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 382.5 கோடி டாலர் அதிகரித்து, 70,094.6 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 906.3 கோடி டாலர் அதிகரித்து, 69,712.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலர் என்ற உச்சத்தை எட்டியது. ஆனால், மத்திய கிழக்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. இதனையடுத்து, ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் டாலர்களை விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது.
ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய இருப்பான, அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ), 312.7 கோடி டாலர் அதிகரித்து 55,598.3 கோடி டாலராக உயர்ந்ததாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு 601 மில்லியன் டாலர் அதிகரித்து, 12,134.3 கோடி டாலராக உயர்ந்ததாகவும், ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் கையிருப்பு 380.68 கோடி ரூபாய் அதிகரித்து, 485.7 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
Summary
India's forex reserves jumped USD 3.825 billion to USD 700.946 billion during the week ended April 10, says RBI.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.09 கோடி டாலராக அதிகரிப்பு!: ரிசர்வ் வங்கி

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,834.6 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,975.9 கோடி டாலராக சரிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



