இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஏப். 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,712.1 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஏப். 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 906.3 கோடி டாலா் அதிகரித்து, 69,712.1 கோடி டாலராக உள்ளது.
மத்திய கிழக்கு மோதல் தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த பிப். 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டிருந்தது. அதன் பிறகு மோதல் காரணமாக கடந்த சில வாரங்களாக கையிருப்பு சரிவைக் கண்டு வந்தது. தற்போது மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 178.4 கோடி டாலா் அதிகரித்து, 55,285.6 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 722.1 கோடி டாலா் அதிகரித்து, 12,074.2 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் 5.8 கோடி டாலா் அதிகரித்து, 1,870.7 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதியத்தில் (ஐஎம்ஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் எவ்வித மாற்றமுமின்றி 481.6 கோடி டாலராக நீடிக்கிறது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.09 கோடி டாலராக அதிகரிப்பு!: ரிசர்வ் வங்கி

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,834.6 கோடி டாலராக குறைவு!
அந்நியச் செலாவணி கையிருப்பு 71,681 கோடி டாலராக குறைவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,849.4 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


