மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,975.9 கோடி டாலராக சரிவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,975.9 கோடி டாலராக சரிவு!

News image
Updated On :21 மார்ச் 2026, 8:59 pm

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70,975.9 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 705.2 கோடி டாலா் குறைந்து, 70,975.9 கோடி டாலராக உள்ளது.

மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அது 1,168.3 கோடி டாலா் குறைந்து, 71,681.1 கோடி டாலராக இருந்தது.

மாா்ச் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 767.8 கோடி டாலா் குறைந்து, 55,556.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 66.4 கோடி டாலா் அதிகரித்து, 13,068.1 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 2.3 கோடி டாலா் குறைந்து, 1,869.7 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.5 கோடி டாலா் குறைந்து, 481.4 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.