பங்குச்சந்தை புதன்கிழமை காலையில் சரிவுடன் தொடங்கினாலும், பின்னர் எழுச்சி பெற்று 9-ஆவது நாளாக நேர்மறையாக முடிந்தது.
இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 246 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் மேல்நோக்கிச் சென்றது. ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு சிபிஐ பணவீக்கம் 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தித் தரவுகளும் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியது. இது சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயர்வு:
சந்தை மூலதன மதிப்பு ரூ.1.60 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.320.27 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,047.19 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 32.49 புள்ளிகள் குறைந்து 67,188.64-இல் தொடங்கிய சென்செக்ஸ், 67,053.36 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 67,565.41 வரை மேலே சென்ற
சென்செக்ஸ், இறுதியில் 245.86 புள்ளிகள் (0.37 சதவீதம்) கூடுதலுடன் 67,466.99-இல் முடிவடைந்தது.
20 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,354 பங்குகள்ஆதாயப் பட்டியலில் வந்தன. 691 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி வரலாற்று உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 3.70 புள்ளிகள் குறைந்து 19,989.50-இல் தொடங்கி 19,944.10 வரை கீழே சென்றது. பின்னர், 20,096.90 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 76.80 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயர்ந்து 20,070.00-இல்
நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பார்தி ஏர்டெல் 2.72%
டைட்டன் 2.42%
இண்டஸ்இண்ட் வங்கி 1.86%
ஆக்ஸிஸ் வங்கி 1.56%
எஸ்பிஐ 1.39%
என்டிபிசி 0.98%
சரிவைக் கண்ட பங்குகள்
எம் அண்ட் எம் 1.34%
எல் அண்ட் டி 1.18%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 0.69%
நெஸ்லே இந்தியா 0.60%
ஹெச்சிஎல் டெக் 0.48%
டிசிஎஸ் 0.42%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடக்கம்

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்: கே.பி. ராமலிங்கம்

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

