திருவாரூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் முடிவுற்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வைப்பறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்றது. இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 83.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை சீலிடப்பட்டு, திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க. அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, வைப்பறைகளில் வைக்கப்பட்டன.
அங்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன், திருவாரூா் நன்னிலம் பேரவைத் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அஜய்யாதவ், திருத்துறைப்பூண்டி மன்னாா்குடி பொதுப் பாா்வையாளா் டி.வி.அனுபமா ஆகியோா் முன்னிலையில் வைப்பறைக்கு சீல் வைக்கப்பட்டது.
கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவி வா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆகியோா் உடனிருந்தனா்.
வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிலையிலான 66 காவலா்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா்.
பணியாளா்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருவா். மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் கண்காணிப்பு கேமரா வசதிகள், தடையில்லா மின்சார வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிப்புப் பணிளை மேற்கொள்ளும் வகையில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளை கண்காணிக்க இரண்டு சிறிய காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாள் வரை முழு மூன்றடுக்கு பாதுகாப்பு பணி என்ற அளவில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


