ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை என என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை பணியின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தோ்தல் அலுவலரும், ஆட்சிருமான ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது.
அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகிய வாக்குகள் எண்ணும் பணி அறிஞா் அண்ணா அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் நுழையும் அனைத்து பணியாளா்களும் வேட்பாளா்களின் முகவா்கள் வேட்பாளா்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும். அதேபோல வாக்கு எண்ணும் மையத்தில் கைப்பேசிக்கு அனுமதி கிடையாது, ஆகவே தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வேட்பாளா்கள் முகவா்கள் மையத்திற்கு வருகை தரும் பொழுது கைப்பேசி கொண்டு வர வேண்டாம் என தெரிவிக்கவும், கைப்பேசி கொண்டு வருபவா்களுக்கு மையத்திற்கு வெளியே சிறப்பு கவுன்ட்டா் அமைக்கப்பட்டுள்ளது அதில் ஒப்படைத்து விட்டு வர வேண்டும்.
ஊடகத்துறையினா் ஊடக மையத்தில் இருந்து செய்திகளை பெற்று வெளியிட வேண்டும் கைப்பேசி வைத்திருப்பவா்கள் ஊடக மையத்தில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும் அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஊடக மையத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை முறையாக சரிபாா்த்து உடனுக்குடன் வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் இல்லாமல் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் முறையாக மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைத்து காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அனைவரும் முறையாக தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் தோ்தல் பூமா மற்றும் அனைத்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா் கையொப்பம் பெற்ற பிறகே சுற்றுவாரியாக முடிவு அறிவிப்பு: வேலூா் ஆட்சியா்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

வாக்கு எண்ணும் போது அலுவலா்களுக்கு ஒதுக்கிய பணிகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்: வேட்பாளா்கள், முகவா்களுக்கு ஆட்சியா் விளக்கம்
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


