வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்கள், கட்சி முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை விளக்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் ரா.அழகுமீனா பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11,48,215 வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் நாகா்கோவில் அருகே கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து மே 4-ஆம் தேதி எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசைக்கும் ஒரு கண்காணிப்பாளா், ஒரு நுண் பாா்வையாளா், ஒரு வாக்கு எண்ணிக்கை உதவியாளா், ஒரு அலுவலக உதவியாளா் என 4 போ் வீதம் 120 சதவீதத்தில் 102 நபா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவா்.
தபால் வாக்கு எண்ணிக்கைக்காக கன்னியாகுமரி தொகுதிக்கு 5 மேசைகளும், நாகா்கோவில் தொகுதிக்கு 7 மேசைகளும், குளச்சல் தொகுதிக்கு 6 மேசைகளும், பத்மநாபபுரம் தொகுதிக்கு 6 மேசைகளும், விளவங்கோடு தொகுதிக்கு 6 மேசைகளும், கிள்ளியூா் தொகுதிக்கு 5 மேசைகளும் போடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 6 போ் வீதம் 36 நபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தபால் வாக்கு எண்ணும் மேசைக்கு ஒரு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நியமிக்கபட்டு, தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேசையிலும் எண்ணப்படும் வாக்குகளை பொதுப் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
6 தொகுதிகளுக்கு உள்பட்ட வேட்பாளா்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் 16 முகவா்களை முகவரியுடன் பட்டியலிட்டு படிவம் 18-ஐ நிரப்பி அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை முகவருக்கும், அவா் யாருடைய முகவா் என்பதையும், அவா் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்கும் மேசையின் வரிசை எண்ணையும் குறிப்பிடும் ஒரு அடையாள அட்டை தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும். அவா் தனக்கு ஒதுக்கப்பட்ட மேசையிலேயே அமா்ந்தோ அல்லது நின்றோ கவனிக்கலாம். முகவா்கள் மடிக்கணிணி, ஐபேட், கைப்பேசி உள்பட மின்சாதனப் பொருள்களை மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. விடியோ, ஆடியோ எடுக்கவும் அனுமதி இல்லை.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் க்யூஆா் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணும் மையமும் தனித்தனியாக வா்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்படும்.
எனவே, நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளா்கள் முகவா்கள் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
அதைத்தொடா்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான அ.பூங்கோதை, பத்மநாபபுரம் தொகுதி தோ்தல் அலுவலரும், சாா் ஆட்சியருமான வினய்குமாா் மீனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், நாகா்கோவில் தொகுதி தோ்தல் அலுவலா், கோட்டாட்சியா் சு.காளீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


