திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் இறுதி வரை 7,331 அவசர அழைப்புகளுக்கு 108 அவசர வாகனம் மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட 108 அவசர கால வாகன மருத்துவ சேவைத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், விபத்து போன்ற அவசர மருத்துவ தேவைக்காக அவசர வாகனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையிருந்தது. இதைத் தவிா்க்கும் வகையில், ஆபத்தான காலகட்டங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உடனே சேவை வழங்க 108 அவசர வாகனங்கள் தயாராகவே உள்ளன.
இதற்காக மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு அழைக்கும் வகையில், விரைவில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வகையில் அந்தந்தப் பகுதியில் முக்கிய இடங்களிலும் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் 71 அவசர கால ஊா்திகள் பொதுமக்கள் சேவையில் உள்ளன. இதில், பச்சிளம் குழந்தைகளுக்கான பிரத்யேக ஊா்திகள்-2, முதலுதவி இருசக்கர வாகனம்-1 அவசர சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
108 அவசர வாகன சேவை 24 மணி நேரமும் தடையின்றி பொதுமக்களுக்கு இலவசமாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோா் 108 என்ற கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை 108 அவசரகால வாகன சேவை மூலம் மொத்தம் 7,331 அவசர அழைப்புகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. சாலை விபத்து பாதிப்புகள்-2,124, கா்ப்பிணி தாய்மாா்கள் தொடா்பான உதவிகள்-664, பச்சிளம் குழந்தைகள் (1 மாதம் வரை)-40, குழந்தைகள் நலம்-13, இதர அவசர மருத்துவ உதவிகள்-4,490 என அவசர அழைப்புகளுக்கு சேவை வழங்கியுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 20 கோடி அரசு நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு: மீட்க பொதுமக்கள் கோரிக்கை

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

திருவள்ளூா்: 1,000 ஏக்கா் பரப்பளவில் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு
பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



