திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

News image
Updated On :18 மே 2026, 2:11 am IST

திருத்தணி முருகன் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அதிகளவில் குவிந்ததால் பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருததணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகை விழா, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகிய காரணங்களால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் மூலவரை தரிசிக்க குவிந்தனா்.

சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். கிருத்திகை மற்றும் பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மலைக்கோயிலில் பக்தா்கள் குவிந்தனா். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

மேலும், முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் குவிந்ததால் ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் துரித வேகத்தில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டு நெரிசலை சரிசெய்தனா். முருகன் கோயிலில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் க.ரமணி மற்றும் கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.