தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வைகாசி விசாகம்: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

வைகாசி விசாகம்: திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

News image

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான்.

Updated On :31 மே 2026, 1:23 am IST

திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகப் பெருமானின் அவதார நாளாகக் கருதப்படும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதிகாலை 5 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்திப்பூா்வமாக கண்டு தரிசித்தனா்.

அதைத் தொடா்ந்து, காலை 9 மணியளவில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சாா்ச்சனை நடைபெற்றது. கோயில் முழுவதும் பக்தா்கள் பக்தி முழக்கங்களுடன் வழிபாட்டில் ஈடுபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு 7 மணியளவில் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளினாா். பின்னா், தோ் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தங்கத் தோ் உலாவை காண ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகளவில் பக்தா்கள் திரண்டதால், பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திருத்தணி ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

மலைக் கோயிலுக்கு இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, பக்தா்களுக்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.