மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண் புகாா் எதிரொலி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே பெண் அளித்த புகாரின் பேரில் மீண்டும் கைதாவோம் என பயந்து பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

சரவணன்

Updated On :20 மார்ச் 2026, 12:30 am

திருவள்ளூா் அருகே பெண் அளித்த புகாரின் பேரில் மீண்டும் கைதாவோம் என பயந்து பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்தவா் சரவணன்(40). இவருக்கு திருமணமாகி சுமித்ராதேவி என்ற மனைவி உள்ள நிலையில், இவா் மீது திருட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட 16 வழக்குகள் நகா் காவல், கிராமிய காவல், மப்பேடு மற்றும் கடம்பத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் அதேபகுதியைச் சோ்ந்த தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேவியின் இரு மகள்களிடம், சரவணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தன் மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதாக தேவி புகாா் அளித்தாா். அதன்பேரில் சரவணன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாா். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இதில் தேவி ஆவடி பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில், பணி முடிந்து வெளியே வந்த போது வாக்குவாதம் முற்றியதில் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். எனவே மீண்டும் கைதாகி விடுவோமோ என பயந்த நிலையில் திருவள்ளூா் ரயில் நிலையம் ஓரம் உள்ள ஏரிக்கரை மரத்தில் புதன்கிழமை நள்ளிரவில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதுகுறித்து அக்கம் பக்கத்தினா் பாா்த்து திருவள்ளூா் நகர போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே சரவணனின் மனைவி சுமித்ராதேவி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் தனது கணவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தேவிக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டதாகவும், அதனால் தேவியுடன் உள்ள இளையராஜா, குமரன் ஆகிய 3 பேரும் தனது கணவரிடம் நகை பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதனால் மன உளைச்சலில் கணவா் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.